தமிழ்நாடு

மேகேதாட்டு அணை விவகாரம் தீவிரம்: நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர திமுக நோட்டீஸ்

top-news

கர்நாடக அரசின் மேகேதாட்டு அணைத் திட்டம் தொடர்பாக விவாதிக்க, நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் (Adjournment Motion) கொண்டு வர திமுக எம்.பி.க்கள் நோட்டீஸ் அளித்துள்ளனர்.

தமிழகத்தின் குடிநீர் மற்றும் பாசன உரிமையை பாதிக்கும் முக்கிய பிரச்சினையாக மேகேதாட்டு அணைத் திட்டம் உள்ளதாக திமுக தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், தமிழகத்தின் நிலைப்பாட்டை உறுதியாக ஆதரிக்க வேண்டும் என்றும் கட்சி வலியுறுத்தியுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இந்த விவகாரத்தை அவசரமாக எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காகவே ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக திமுக எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர்.

காவிரி நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்தை பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும், தமிழக விவசாயிகளின் நலனை பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேகேதாட்டு அணைத் திட்டம் தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே நீண்டகாலமாக கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில், இந்த விவகாரம் மீண்டும் தேசிய அரசியல் அரங்கில் முக்கிய விவாதமாக உருவெடுத்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசின் பதிலும், நாடாளுமன்றத்தில் நடைபெறும் விவாதமும் முக்கியத்துவம் பெறும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.