தமிழ்நாடு

லண்டனில் ரூ.11,000 கோடியில் மாபெரும் முதலீட்டு ஒப்பந்தம்: தமிழக முதல்வர் விஜய் முன்னிலையில் கையெழுத்து!

top-news

சென்னை: தமிழகத்திற்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் விஜய் முன்னிலையில், முன்னணி கார் உதிரி பாக நிறுவனமான 'சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல்' (Samvardhana Motherson International) நிறுவனத்துடன் ரூ. 11,000 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்:  நிறுவனம்: சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் மற்றும் அதன் ஐரோப்பா, பிரிட்டன் கூட்டு 

நிறுவனங்கள்.  முதலீட்டுத் தொகை: தோராயமாக ரூ. 11,000 கோடி.  வேலைவாய்ப்புகள்: வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, கூட்டிணைப்பு மற்றும் தளவாட வசதிகள் போன்ற துறைகளின் மூலம் தமிழகத்தில் 7,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவுள்ளன.  கையெழுத்திட்டவர்கள்: தமிழ்நாடு அரசின் 'வழிகாட்டி' (Guidance) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப் மற்றும் சம்வர்தனா மதர்சன் நிறுவனத்தின் உலகளாவிய சந்தைப்படுத்தல் தலைவர் பாரி பெயிண்டர் ஆகியோர் ஒப்பந்தங்களைப் பரிமாறிக் கொண்டனர்.  

இந்த நிகழ்வின் போது பிரிட்டனுக்கான இந்தியத் தூதர் குமரன் பெரியசாமி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர். தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் முதல்வர் விஜய் மேற்கொண்ட இந்த லண்டன் பயணம் மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.