விளையாட்டு

ஜூனியர் ஆசியக் கோப்பை ஆக்கி: 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

top-news

மஸ்கட்: ஜூனியர் ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரின் அரைஇறுதிப் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

ஓமனின் மஸ்கட் நகரில் நடைபெற்று வரும் இத்தொடரின் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய இளையோர் அணி, மலேசிய அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய வீரர்கள், எதிரணியின் தற்காப்பு ஆட்டத்தைத் தகர்த்து தொடர் கோல்களை அடித்தனர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் இந்திய ஜூனியர் ஹாக்கி அணி 4-வது முறையாக ஜூனியர் ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. சாம்பியன் பட்டத்திற்கான இறுதிப்போட்டியில் இந்திய அணி, மற்றொரு அரைஇறுதியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.